திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடில் (ஆதரவற்ற மாணவர்கள் தங்கி பயலும் பள்ளி). எம் மையத்தின் தலைவராக சுவாமி கருப்பையா, பொருளாளராக ராமமூர்த்தி, காசாளராக தனசேகர், மையத்தின் நிர்வாகிகளாக ஜேசுராஜ் (வார்டன்), குமார், பார்த்திபன், சிவகிரி ஆகியோர் உள்ளனர். இதில் குடில் தலைவர் கருப்பையா மற்றும் பொருளாளர் ராமமூர்த்தி இடையே பல மாதங்களாக ஈகோ போட்டி இருந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ராமமூர்த்தி தரப்பு குடில் தலைவர் கருப்பையா மீது ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், நிர்வாகிகள் இரண்டு பேர் மீது மாணவர்களிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் புகார் அளித்துள்ளதாக தகவல்.
தலைவர் கருப்பையா விடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான இரண்டு நிர்வாகிகளை போலீசர் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்.
இதனிடையே குடில் தலைவர் கருப்பையாவை கைது செய்யப் போவதாக வந்த பரவிய தகவல் கேட்டு முன்னாள் மாணவர்கள் சிலர் நுழைவு வாயில் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடில் பொருளாளர் ராமமூர்த்தியின் மருமகன் மாநில அமைச்சர் ஒருவரிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிவதாகவும் அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக ஆதரவற்ற மாணவர்களின் நலனுக்காக செயல்படும் குடில் நிர்வாகத்தின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருவதும் தெரியவந்துள்ளது.