திருச்சியில் சமீபத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டம் தன் கைவரிசைகளை காட்டி வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்து உள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் குடும்பத்துடன் வந்து இறங்கினர் அதிலிருந்து நபர்கள் சமீபத்தில் கருமண்டபத்தில் நடந்த வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் போல உள்ளது என்ற சந்தேகத்தில் திருச்சி மாநகரம் காவல்துறை DC ஸ்ரீதேவி அவர்களின் தலைமையில் இயங்கி வந்த ஸ்பெஷல் டீம் சுற்றி வளைத்த பொழுது, வட மாநிலத்தில் இருந்து வந்த 4 நபர்கள் இதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர் இந்த நிலையில் ஸ்பெஷல் டீம் காவலர்கள் அவர்களை துரத்திப் பிடித்து. விசாரித்த பொழுது இவர்கள்தான் கருமண்டபம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டம் என்று தெரியவந்தது மேலும் விசாரிக்கும் பொழுது. இவர்களுடன் வந்துள்ள பெண்கள், முதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு விட்டு அதை கொள்ளையர்களிடம் தகவல் கொடுத்து கொள்ளையடித்து வந்ததும் மேலும் கொள்ளை அடித்த உடனே இவர்கள் வட மாநிலத்திற்கு சென்று விடுவதும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது இவர்கள் மீது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பல வழக்குகள் உள்ளதால் திருச்சி காவல்துறையினர் பிடித்த இந்த நபர்களை விசாரிக்க பல மாவட்ட காவல் துறையினர் திருச்சி வந்து முகாமிட்டுள்ளனர் இது தற்போது திருச்சியில் பெரும் பரபரப்பாக உள்ளது மேலும் இந்த நிகழ்வு தமிழ் திரைப்படமான தீரன் படத்தில் வந்தது போல இவர்கள் செயல் பட்டனை கண்டு காவல்துறையினர் அதிர்ந்து போய் உள்ளனர். மேலும் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள மக்கள் இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் அவர்கள் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கின்றார்கள். இந்தப் பணியில் ஈடுபட்ட ஸ்பெஷல் டீம் காவலர்கள் செய்துள்ள சிறப்பான பணிக்கு பொதுமக்கள் இடையிலும் காவல்துறையினருக்கு நல் மதிப்பு ஏற்படுத்துள்ளது. இதில் தன் உயிரை துச்சமாக மதித்து கொள்ளையர்கள் பிடிக்கும் நோக்கில் செயல்பட்ட சில காவலர்களுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுபோன்று செயல்படும் காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மற்ற காவலர்கள் இதுபோன்று செயல்பட ஆர்வம் காட்டுவதற்கு எடுத்துக்காட்டாக இவர்களுக்கு பாராட்டு பொதுமக்களிடமிருந்து குவிந்து வருகிறது.