எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன் என ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு விழாவில் உரையாற்றினார்.
நேற்று தான் தமிழ் கற்க தொடங்கினேன், அடுத்து வரும் நாட்களில் தமிழை கற்று தமிழில் பேச முயற்சிப்பேன் என கூறினார். இந்தியாவின் மிகப்பெரியதான அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினேன் எனவும் பேசினார்.