துடிப்போடு பணி செய்யும் ஒரு நல்ல அதிகாரியை பணியில் நியமிக்க கோரிக்கை….
தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது அதில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கும் பணியை வேகப்படுத்த அறநிலையத்துறையில் மாவட்ட அளவிலான 36 உதவி ஆணையர் அலுவலகங்களில் தலா ஒரு வட்டாட்சியர் பணியிடம் உட்பட 108 பணியிடங்களை உருவாக்கி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
மேலும் புதிதாக ஏற்படுத்தப்பட்ட வட்டாட்சியர் பணியிடங்களை வருவாய்த் துறையின் மூலமாக அந்தந்த மாவட்ட அலகில் இருந்து பணிமாற்றம் மூலம் (அயல்பணி அடிப்படையில்) நியமனம் செய்திடும் வகையில் உத்தரவு பிறப்பித்து அதோடு வட்டாட்சியர் பணியிடங்களுக்கு துணை பணியிடங்களாக தலா ஒரு தட்டச்சர் (36 தட்டச்சர்), ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்களும் ஏற்படுத்தி பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நேர்வில் திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்படி பணியில் இருந்த வட்டாட்சியர்கள் கோயில் நிலங்களை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பெயரில் உள்ள நிலங்களில் ஒரு சில வட்டாச்சியர்கள் லஞ்சமாக பல லட்சங்களை வாங்கிக் கொண்டு கோயில் நிலத்தினை தனிநபர் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து உள்ளனர்.
மேற்படி கோயில் பெயரில் உள்ள நிலத்தில் தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்திட கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட கோயில் உதவி ஆணையர் அவர்களால் மாவட்ட வருவாய் அலுவலருக்கும் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கும் நேரடியாகவே புகார் மனு கொடுக்கப்பட்டு இது நாள் வரை ஒரு விசாரணை அழைப்பானை கூட வழங்காமல் வருவாய் துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்..
இந்து சமய அறநிலைத்துறை கீழ் பணியாற்றும் வட்டாட்சியர் அவர்களுக்கு கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் தனது உயர் அதிகாரிகளை சந்தித்து கோயில் சம்பந்தமான ஆவணங்களை காண்பித்து துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அதற்கு மாறாக இதுவரை அது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும்….
இனிவரும் காலங்களில் கோவில் நிலங்களை மீட்கும் பணியில் மிகவும் அனுபவம் உள்ள மற்றும் துடிப்போடு பணி செய்யும் ஒரு நல்ல அதிகாரியை நியமிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்…