திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது. இங்கு நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய
காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.83 லட் சத்து 79 ஆயிரத்து 394 ரொக்கம், 2 கிலோ 667 கிராம் தங்கம், 3 கிலோ 121 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் 104 இருந்தது.
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி காணிக்கை என்னும் பணியினை சிசிடிவி காட்சியில் பார்த்த போது, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றி வேல் யாரும் பார்க்காத நேரத்தில் சுமார்30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடி அவரது பேன்ட் பாக்கொட்டில் மறைத்து வைப்பது தெரிந்தது. இதையடுத்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 30 கிராம் தங்க நாணயங்களை வெற்றி வேலிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதுபற்றி சமயபுரம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் தற்போது தலைமறைவாகியுள்ளார்.