Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தும் அதை மதிக்காத திமுக கவுன்சிலர் குடும்பம்…..

0

திருச்சி 62 வது வார்டு திமுக கவுன்சிலர் சுபா அவர்கள் இருந்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய தந்தை ராஜகோபாலன் திமுகவில் பதவி வகித்து வருகிறார்

சமீபத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் கவுன்சிலரை தவிர வேறு யாரும் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது அப்படி மீறி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை வீற்றிருந்த நிலையில் தற்போது திருச்சி 62 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சுபா அவர்களின் தந்தை ராஜகோபாலன் ஒரு படி மேலே போய் நான் தான் கவுன்சிலர் என்று தோரணையில் பல அதிகாரிகளை மிரட்டி வந்த நிலையில் தற்போது துப்புரவு தொழிலாளர்களிடம் தன்னுடைய கைவரிசை காட்டியுள்ளார் அதாவது துப்புரவு தொழிலாளர்கள் இடம் மாதம் ஆயிரம் ரூபாய் என்றும் விடுமுறை எடுத்தால் 250 ரூபாய் இவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் எழுதப்படாத சட்டம் ஒன்றை ஏற்றி உள்ளார்  என்று புலம்பும் துப்புரவு தொழிலாளர்கள் மேலும் இவருக்கு கையாளாக ஒரு நபரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார் அவருக்கு பணியே தொழிலாளர்களை கண்காணிப்பது புதிய வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அதைப் பற்றி விபரங்களை தெரிவிப்பது போன்ற முக்கியமான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் கூடுதலான தகவல் ராஜகோபாலின் முக்கிய உறவினரான ஒரு பெண்ணுக்கு பனி கொடுப்பதற்காக தற்போது பணியில் உள்ள பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவர்கள் பணியை விட்டு வெளியே சென்றாள் அந்தப் பணியை தன்னுடைய சொந்தக்கார பெண்ணுக்கு ஒதுக்குவதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இவரைப் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருந்தது அதில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய பாய் மற்றும் இதர நிவாரண பொருட்களையும் பொது மக்களுக்கு கொடுக்காமல் தான் எடுத்துச் சென்றதாகவும் ஒரு புகார் ஏற்கனவே இருந்து வந்த நிலையில் தற்போது துப்புரவு தொழிலாளர் மத்தியில் பணம் வசூல் செய்யும் செயல் பெரும் சர்ச்சையாக தற்போது வெடித்துள்ளது இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது இந்த நிலையில் இந்த புகாரை அமைச்சர் கே என் நேரு அவர்களிடம் புகார் கொடுக்கவும் தயாராகி வருகின்றனர் துப்புரவு தொழிலாளர்கள் மேலும் வறுமையில் வாடும் துப்புரவு தொழிலாளர்களிடம் பணம் வசூல் செய்வது தமிழக முதல்வர் ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கும் என்பது தெரிந்தும் அதை செய்கிறார்கள் இது திமுக ஆட்சிக்கு இவர்கள் செய்யும் பெரும் துரோகம் இதில் முதல்வர் கண்டு கொள்வாரா நடவடிக்கை எடுப்பாரா என்று துப்புரவு தொழிலாளர்கள் ஏக்கம் மேலும் அந்தப் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளே வன்மையாக கண்டிக்கின்றனர் இந்த விஷயத்தை மேல் மட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்