சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களே”
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி படிப்பில், பல துறையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார். மேலும், இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து பேசத் தொடங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ” சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களே” என்று தொடக்கத்தில் கூறியபோது அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய ஆர்.என்.ரவி, ” மருத்துவ மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் இந்த பட்டம் சாத்தியமாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் நல்வாழ்வு மிக முக்கியமானதாக உள்ளது.