திருச்சி மார்ச் 11:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கொடிமரம் முன்பு அனுமன் சிலையை நகர்த்தி வைத்ததை கண்டித்தும், மூலவர் ரங்கநாதர் பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ராமானுஜர் திருமால் அடியார்கள் குலம் சார்பில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் கம்பத்தடி ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பாக 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் – ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம், பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு கலைந்து சென்றனர்*
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தமிழக மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து ரெங்க நாதரை தரிசனம் செய்ய வருபவர்கள் கொடி மரம் முன்பு உள்ள கம்பத்தடி ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு மூலவர் ரங்கநாதரை தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் ஆரியப்படால் வாசல் தாண்டி கொடிமரம் முன்பு உள்ள ஆஞ்சநேயர் சிலையை கடந்த 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நகர்த்தி வைத்துள்ளனர்.
3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை கடந்த 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நகற்றி வைத்ததை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வலியுறுத்தி
திருமால் அடியார்கள் குலம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு ஆஞ்சநேயர் சிலையை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும், ஸ்ரீ ராமானுஜ திருமால் அடியார்கள் குலம் சார்பில் ஒரு வருடத்திற்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது திருமால் அடியார்கள் குலம் சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மூலவர் செல்லும் முன்பு கொடிமரம் அருகே உள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர் , திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்கள்,பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே கொடிமரம் முன்பு உள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கம்பத்தடி ஆஞ்சநேயர் பழைய இடத்திற்கு வைக்க வேண்டும். ரங்கநாதர் பாதத்தை சீரமைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், தற்போது உள்ள ஆட்சியாளர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் இரண்டு வார காலத்திற்குள் அதிகாரிகளும் தெரிவித்து பதில் அளிப்பதாக கூறியதன் பேரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டனர்.