கோவை கூட்டத்தில், இது கோவையா.. இல்லை கரூரா என்று குழம்பிவிட்டதாக உதயநிதி கூறினார். எங்களுக்கும் அதே குழப்பம்தான். அந்தளவுக்கு கரூர்காரர்களின் ஆதிக்கமே எங்கும் பரவிக்கிடக்கிறது” என குமுறுகின்றனர் உடன்பிறப்புகள்கோட்டையை பிடித்தாலும், தி.மு.க-வினரால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கூட பிடிக்க முடியவில்லை..கோவை மாவட்டத்துக்கு ஆளுமையான தலைவர்கள் இல்லையே…” என்ற வேதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அங்கு பொறுப்பாளராக நியமித்தது கட்சித் தலைமை. ஆனால், அவரின் செயல்பாடுகளால் உடன்பிறப்புகள் தற்போது நொந்து போயிருக்கிறார்களாம்.முதல்வர் வருகையின் போது, நிர்வாகிகள் யாரும் விமானநிலையத்துக்கோ, ஹோட்டலுக்கோ வரக்கூடாது. நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து ஏற்பாட்டை கவனித்துக் கொள்ளுங்கள்.” நவம்பர் மாதம் முதல்வர் மு.க ஸ்டாலின் விசிட்டுக்கு முன்பு நடந்த கோவை தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய வார்த்தைகள் இவை.டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் விசிட்டின்போதும், நிர்வாகிகள் யாரையும் விமான நிலையத்துக்கு வரக்கூடாது என்றுகூறிவிட்டார். “கோவை கூட்டத்தில், இது கோவையா.. இல்லை கரூரா என்று குழம்பிவிட்டதாக உதயநிதி கூறினார். எங்களுக்கும் அதே குழப்பம்தான். அந்தளவுக்கு கரூர்காரர்களின் ஆதிக்கமே எங்கும் பரவிக்கிடக்கிறது.” என்று குமுறுகின்றனர் கோவை உடன்பிறப்புகள்
பூத் கமிட்டிதான் கட்சியின் ஆணிவேர். கோவையில் பூத் கமிட்டி அமைத்து, உதயநிதி தலைமையில் கூட்டம் நடத்திய பிறகு, கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 3,000 பூத் கமிட்டிகளுக்கு தலா ரூ.10,000 சென்றிருக்கிறது. அதனால், அவர்கள் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள் ஆகிவிடுவார்கள்.அவரைத் தாண்டி, இன்னொரு தலைவர் உருவாகி விடக்கூடாது என்பதுதான் திட்டம். கொடிசியா மைதானம் அருகே ஒரு பெரிய வீட்டை செந்தில் பாலாஜி வாடகைக்கு எடுத்துவிட்டார். புதிய காரும் வாங்கிவிட்டார். செந்தில்பாலாஜியின் போக்கு கொங்கு மண்டலத்தில் உள்ள திமுகவினருக்கு பெரும் பிரச்சனையாக மாற உள்ளது தற்போது கரூரில் உள்ள முக்கிய புள்ளிகள் அனைவரும கோயம்புத்தூரில் முகாமிட்டுள்ளனர்.
விரைவில் கோவை திமுக பொறுப்பாளர்களுக்கும் கரூர் திமுக பொறுப்பாளர்களுக்கும மோதல் நடைபெறும் என்று கருத்து நிலவி வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கு முன்பு அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது திமுகவிற்கு வந்தவுடன் அமைச்சர் பதவி கொடுத்து கொங்கு மண்டலத்தையும் செந்தில் பாலாஜி இடம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக கோவை திமுக நிர்வாகிகள் புலம்பல்