அரியலூர் மாவட்டம் வட்டம் வடுக பாளையம் கிராமத்தைச் சேர்ந்த. லாவண்யா என்ற பெண் திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்றவர். இவரை கிறிஸ்துவராக மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் மதம் மாற்றும் பணியை செய்து வருகிறது என்றும் இதற்கு அடிபணியாத மாணவி லாவண்யா அவர்களை பள்ளி விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பாமல் பள்ளியிலேயே தங்க சொல்லி கழிப்பிடம் கழுவுதல் ,பள்ளியை சுத்தம் செய்தல் ,பாத்திரம் கழுவுதல் ,சமையல் செய்தல் ,போன்ற அனைத்து வேலைகளையும் செய்யச்சொல்லி கொடுமைபடுத்தியதாக தெரிய வருகிறது இதனால் மாணவி தற்கொலைக்கு முயன்று தற்போது 85% நுரையீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதற்கு மாவட்ட நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் இந்தப் பள்ளியை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அரியலூர் மாவட்டம் கையில் எடுத்து போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள்