பாலக்கரையில் பரபரப்பு சம்பவம்.
கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் சிக்கியது. ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மார்ச் 6-:திருச்சி பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவருடைய ரோந்து வாகனம் பெல்சி கிரவுண்ட் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்த போது தூரத்தில் ஒரு ஆட்டோ நின்றுகொண்டிருந்தது. இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் பெரியசாமிக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ அருகில் சென்ற போலீஸ் வேனை நிறுத்தி ஆட்டோ அருகில் சென்று பார்க்க முயன்றபோது அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கும்பல் அங்கிருந்து திடீரென தப்பி ஓடினார்கள்.இதை அடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் இரண்டு பேர் மட்டும் பிடிபட்டனர் மீதி நான்கு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஒருவருக்கொருவர் பின் முரணாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 27) அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 23)என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் விஜய், பாபு, அகஸ்டின், மகேந்திரன்,தேவா உள்ளிட்டோர் ஒன்று கூடி கொள்ளையடிக்கும் திட்டம் தீட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் விஜய், அஜித் ஆகிய இரு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய நான்கு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.