திருச்சி, மார்ச் 28:
திருச்சியில் சாலை விபத்தில் டீக்கடை ஊழியர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மலைக்கோயில் வஉசி தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அதே பகுதியில் உள்ள டீக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் புதன்கிழமை, அப்பகுதியில் திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு திருச்சி புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.