Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ராமாயண மகாபாரத ஒரு குப்பை என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்……

0

நாடாளுமன்றத்தில் ஜெய் பீம் அல்லாஹு அக்பர் என்று கூறிய திருமாவளவன் தற்போது ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் குப்பை என்று கூறி மத கலவரத்தை தூண்டும் வகையில் கருத்தரங்கில் பேசியுள்ளார். ராமாயண மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில் திணித்து உள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய நிலையில், திருமாவளவன் கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்துடன் பேசுகிறார் என பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பகுத்தறிவு கருத்துகள் மூலமாக மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காகவே ராமாயணம் மகாபாரதம் போன்ற புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில் திணித்துள்ளனர் எனவும், இந்த சனாதன இந்தியாவில் சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் நீதி கிடையாது எனவும், தனித்தனி தீவுகளாக இருந்த சமூகங்களை மாற்றி அமைத்ததில் இரண்டு இதிகாசங்களுக்கும் பெரும் பங்கு உண்டு என பேசினார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஐப் பொறுத்தவரை மத மாற்றத்தைத் தடுத்து காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என இரண்டு காரணங்களுக்காக தலித் மற்றும் பழங்குடி மக்களுடன் நெருங்கிப் பழகி வருகின்றனர் எனவும், இந்தியர்களை மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் இரு அமைப்பினரும் பிரிக்கிறார்கள் என பேசிய திருமாவளவன்,

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அதில் பட்டியலின அமைச்சர் எந்த இடத்தில் இருக்கிறார்? தமிழ்நாட்டில் பட்டியலின அமைச்சர் எங்கு இருக்கிறார்? எங்கே போனது சமூக நீதி என்ற முருகன், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அதுகுறித்து திமுகவிடம் கேட்கலாம் எனவும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கடைசி இடத்தில் இருப்பது நியாயமா என்று ஏன் திருமாவளவன் கேட்காமல் இருக்கிறார் என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்