Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ராஜேந்திர பாலாஜி.. சுற்றி வளைத்த போலீஸ்.. பரபர பின்னணி*

0

சென்னை: கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி இன்று போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை அமைத்து தேடி வந்தது தமிழக காவல்துறை.ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜி தற்போது தலைமறைவாகி இருந்தார்.கைதுஇந்த நிலையில் பெரும் தேடலுக்கு பின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார். 3 வாரமாக தேடப்பட்டு வந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி போலீசார் மூலம் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவர் தேடப்பட்டு வந்தார். இதற்காக முன்பே வங்கி கணக்கு முடக்கப்பட்டு, லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.ராஜேந்திர பாலாஜி கைதுஇந்த நிலையில்தான் ராஜேந்திர பாலாஜி திருப்பூர், ஓசூர் அல்லது கர்நாடகாவில் இருக்கலாம் என்று போலீசார் தரப்பிற்கு தகவல் சென்றுள்ளது. தலைமறைவாக இருக்கும் போதே உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறலாம் என்று ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்தார். ஆனால் அதற்கு முன்பாக போலீசார் ராஜேந்திர பாலாஜியை தற்போது கைது செய்து உள்ளனர். காரில் மாறி மாறி, இடம் மாறி வேறு வேறு இடங்களில் ராஜேந்திர பாலாஜி இத்தனை நாட்கள் தங்கி இருக்கிறார்.ராஜேந்திர பாலாஜி தலைமறைவுஇப்போது அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டாலும் அங்கு அவர் நீண்ட நாட்களாக இல்லை என்று கூறப்படுகிறது. அவர் 6க்கும் மேற்பட்ட இடங்களில் மாறி மாறி தங்கி இருக்கிறார். கடைசியாக திருப்பத்தூரில் கூட அவர் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு தேடிய போதும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரின் உறவினர்களின் போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்து வந்தனர்.மாறி மாறி ஓடினார்600 பேரின் போனை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்து வந்தனர். அதில்தான் சமீபத்தில் உறவினர் ஒருவருக்கு ராஜேந்திர பாலாஜி போன் செய்துள்ளார். அப்போது அவரின் போன் எண் சிக்னல் மூலம் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு போலீஸ் செல்லும் முன் அவர் எஸ்கேப் ஆனார். ஆனால் இதை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் ஆராய்ந்து உள்ளனர்.போன் சோதனைஅவரின் காரை சிசிடிவி மூலம் சோதனை செய்து.. அவர் எங்கே செல்கிறார் என்று கண்டுபிடித்துள்ளனர். கடைசியில் அவர் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கே ஒரு தனிப்படை சென்று போலீசார் அவரை கைது செய்தனர். கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி இன்று போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.தப்ப முயற்சிபோலீசார் வாகனத்தை பார்த்ததும் காரில் ஏறி அவர் தப்ப முயன்று இருக்கிறார். ஆனால் போலீஸ் அவரை சுற்றி நின்று கொண்டனர். அவரின் கார் அப்படியே வளைக்கப்பட்டது. இதனால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை. கடைசியில் போலீசாரிடம் அவர் சரண் அடையும் நிலை ஏற்பட்டது. அங்கே கைது செய்யப்பட்ட அவர் இன்று சென்னை அழைத்து வரப்ப இருக்கிறார்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்