பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பாஜகவும் காங்கிரசும் இல்லாமல் ஆம் ஆத்மி கட்சியினர் புதிதாக ஆட்சியை பெற்றுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக காணப்படுகிறது.
பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆளும் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியினர் கைப்பற்றினர். இவ்வாறு இக்கட்டான நிலையில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முடிவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சி பொறுப்புகளிலிருந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
நாளை நடைபெறும் காங்கிரஸ் செயற்குழுவில் பதவி விலக முடிவு பற்றிய அறிவிப்பை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வெளியிட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.