Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பிரதமர் மோடி அவர்கள் முதல்வர் ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்…..

0

பொதுமக்களிடையே பேசிய ஆ ராசா, ‘கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் 40 எம்பிக்கள் மக்களவைக்குச் சென்றனர். அவர்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து நமக்கு எந்தவொரு திட்டமும் கிடைக்கவில்லை. அந்த 40 பேரும் பாஜகவுக்கு அடிமைகளாகவே இருந்தனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் கூட, வட மாநிலங்களில் மோடிக்கு ஆதரவான நிலை இருந்த போதிலும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. மாநிலத்தில் 39 இடங்களில் திமுக கூட்டணியே வென்றது.

தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தொடர்ந்து அழிக்க முயலும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. நீதிமன்றங்களைப் பார்த்துக் கூட பிரதமர் மோடி பயப்படுவதில்லை. ஆனால், மு.க.ஸ்டாலினையும் திமுக எம்பிகளையும் பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். பிரதமரைக் கட்டுப்படுத்தும் தகுதி தமிழக எம்.பிக்களுக்கு உள்ளது. பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் பிரதமர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள். ஆனால், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை.

கொரோனா பரவ தொடங்கிய போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெளியே கூட வரவில்லை. ஆனால், கொரோனா உச்சத்தில் இருந்த போதும், ஸ்டாலின் வெளியே வந்து மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உதவிகளைச் செய்தார். கடந்த தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்