கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஐந்து தொகுதிகளை கைப்பற்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்றத்தில் நுழைந்தது அடுத்ததாக 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வேண்டும் என்பதற்காக பாஜக செயல் திட்டங்களை வகுத்துள்ளது.அதில் ஒரு கட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாவட்ட அளவில் கட்சியின் கட்டமைப்புகளை ஆய்வுசெய்து தேவைப்பட்டால் மாற்றங்களை செய்யவும் மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார். சரியாக செயல்படாத 30 மாவட்ட தலைவர்கள் மாற்றப்படலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறப்படுகிறது. ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் 60 மாவட்டங்களிலும் கட்சி அமைப்புகளை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
மற்ற கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், பிரபலங்கள், பேச்சாற்றல் மிக்கவர்கள் போன்றவர்களை பாஜகவில் இணைய முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுக நிர்வாகி மாணிக்கம் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கட்சியில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் பற்றி அண்ணாமலை கூறியதாவது,
கட்சியின் பூத் மட்டத்திலிருந்து மாநில நிர்வாகிகள் வரை கடுமையாக உழைக்கிறார்கள். எங்களுக்கு இப்போது தேவை வேகமாக ஓடும் குதிரைகள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். மாவட்ட தலைவர்கள் தங்கள் பகுதியில் வலிமையாகவும் செல்வாக்குடனும் இருக்கிறார்கள். கட்சியை வலுப்படுத்த பல்வேறு பணிகளை அவர்களுக்கு கொடுத்துள்ளோம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.