திருச்சியில் பரபரப்பு சம்பவம்.
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 29 1/2 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.
திருச்சி மார்ச் 5- திருச்சியை அடுத்த சமயபுரம்அருகே ஈஞ்சூர் குடி தெருவை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மனைவி அங்கு ரத்தினம் (வயது 70) சம்பவத்தன்று இவர் குளித்தலையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்கு அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலாக காணப்பட்டது. இந்நிலையில் அங்கு ரத்தினம் தோளில் ஒரு பை மாட்டிருந்தார். அந்த பையில் திருமண நிகழ்ச்சியில் கழுத்தில் அணிவதற்காக தங்க வளையல், அட்டிகை உள்ளீட்ட 29 1/2 பவுன் தங்க நகை வைத்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் நிறுத்தம் வந்தவுடன் பஸ்சில் இருந்து அன்பு ரத்தினம் கீழே இறங்கினார். அப்பொழுது பையில் இருந்த தங்க நகையை சோதனை செய்து பார்த்தார். அப்பொழுது பையில் இருந்த முத்துமணி, வளையல்,அட்டிகை உள்ளிட்ட 29 1/2 பவுன் தங்க நகை திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அங்குரத்தினம் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 29 1/2 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை
வலைவிசி தேடி வருகின்றனர்.