தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இதில், வெல்லம், புலி, மிளகு, ரவை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாக தமிழகம் முழுவதிலும் புகார்கள் எழுந்தன.
புளியில் பல்லி, மிளகில் பருத்தி கொட்டை, வெல்லத்தில் மருத்துவ சிரஞ்சி, பான் மசாலா கவர், பழைய துணி, உருகிய வெல்லம், உடைக்கவே முடியாத வெல்லம் என்று நாளுக்கு நாள் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருந்தன.
குறிப்பாக இந்த 21 பொருட்களுக்கு பதிலாக 16 மற்றும் 15 பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது.
முதலில் இதனை மறுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும், மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தரமற்று இருப்பதாகவும், இதில் ஊழல் நடந்து இருப்பதாகவும் எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை வழக்கு தொடர்ந்துள்ளார்.