Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை……

0

கடந்த 5/7/2022 அன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்தாம் தேதி நடைபெற இருந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடத்தில் பசுமாடு கன்று குட்டிகள் காளை மாடு ஒட்டகம் முதலியவற்றை பொது இடத்தில் வைத்து வெட்டக்கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு சுற்றறிக்கை மாநகராட்சி அதிகாரி மற்றும் காவல் துறையினருக்கு மற்றும் பல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார் ஆனால் நடந்ததோ வேறு. எட்டாம் தேதி அன்று மாடு வெட்டுவதற்கான கொட்டாய்கள் பல இடங்களில் அமைத்தனர் இஸ்லாம் அமைப்பினர் இதை கண்டித்து இதை தடுக்க கோரி அரியமங்கலம் காவல் ஆய்வாளரிடம் அரியமங்கலம் பிஜேபி மண்டல் தலைவர் அவர்கள் இந்த மாடு வெட்டும் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். ஆனால் காவல்துறையினரும் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் கடுமையாக போராடியும் அதை தடுக்க இயலவில்லை. இதில் பல அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் திருச்சி மாநகர எம்எல்ஏக்களும் தலையிட்டு அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.என்ற தகவலும் வெளியானது ஆகையால் காவல்துறையினரும் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் பெயருக்கு சில மாடுகளை மட்டும் அங்கிருந்து இடம் மாற்றிவிட்டு சென்று.விட்டனர் .500க்கும் மேற்பட்ட மாடுகளை திருச்சி மாநகரம் முழுவதும் பல இடங்களில் மாடுகளை வெட்டி உள்ளதாக  தகவலும் வெளியானது சட்டம் தன் கடமை செய்யும் என்று அமைதியாக இருந்த பாஜகவினர் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் மாடுகளை வெட்டும் வீடியோக்கள் வெளியானது அதில் பசு மாடும் இருப்பதைக் கண்ட இந்து அமைப்புகளும் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து.

 

 

மட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீதும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகர் அவர்களின் தலைமையில் மனு கொடுத்து ஆதாரங்களையும் கொடுத்துவிட்டு வந்துள்ளனர் இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் என்ன செய்யப் போகிறார் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்து இருக்கும் பாஜக வினர்

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்