இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி முதல் குடியரசு தினக் கொண்டாட்டம் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டு, கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா, ஜனவரி 24-க்கு பதில், ஜனவரி 23-ம் தேதி தொடங்கிக் கொண்டாடப்படும்” என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான முக்கியக் காரணமாக, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளையும் சேர்த்து குடியரசு தின விழா கொண்டாடப்படுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கொண்டாடப்படும் குடியரசு தின விழா, ஜனவரி 23-ம் தேதியே தொடங்கிவிடும்!