Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

புதிய போக்குவரத்து விதி அமலானது.

0

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1026 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், டிரைவர் குடிபோதையில் இருந்து, அவர்களுடன் பயணிப்பேர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்