Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

நீட் தேர்வு பற்றி திமுகவின் நிலையை பற்றி பரப்புரையை துவக்கி வைத்தார். அ.ராசா…..

0

திமுகவால் நீட் தேர்வில் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வர இயலாது என்பதையும் மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வை எதிர்த்து சட்டம் நிறைவேற்றிய போது இவர் பேசிய காணொளி ஒன்றும் தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் ஆல் திமுகவை கலாய்த்து வருகிறார்கள்.
சில சமயம் ராசா அவர்கள் உண்மைகளை மறைக்காமல் பேசிவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும் தற்போது அது உறுதி செய்யப்பட்டது அவர் கூறுகையில்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி, புஞ்சை புளியம்பட்டி நகராட்சி மற்றும் மூன்று பேரூராட்சிகளில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அ.ராசா வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி நீட் தேர்வு பற்றி பரப்புரையை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகளுக்கு பதவி இல்லாமல் இருக்கலாம் ஆனால் முதலமைச்சரை அணுகி சத்தியமங்கலம் பகுதிக்கு போராடும் ஆற்றல் எங்களிடம் உள்ளது என தெரிவித்த அவர் வார்டுகளில் உள்ள மக்களின் குறைகள் என்ன என பட்டியலிட்டு நான் வெற்றி பெற்றால் அதை சரி செய்வேன் எனக் கூறி வாக்குகள் சேகரியுங்கள் என அவர் தெரிவித்தார். மேலும் அங்கொன்றும் இங்கொன்றும் தவறுகள் நடந்தாலும் தவறை சரிசெய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் தந்தையைப் போல் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் எனவும் வெளிப்படையான அரசாங்கம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சிலர் கேட்பார்கள் திமுக தான் நீட் தேர்வுக்கு தீர்மானம் நிறைவேற்றியது என்ன ஆனது என்று, ஆனால் இதே ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியில் 40 எம்பிக்கள் இருந்தபோது அதிமுக நீட் தேர்வு விலக்குக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழக கவர்னரை திரும்பப் பெறு என எங்களைப் போன்று யாரும் குரல் எழுப்பவில்லை எனவும் ஆனால் நாங்கள் குரல் எழுப்பினோம் என அவர் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு விலக்கு பெறுவதில் மீண்டும் வெற்றி பெறுவோம் ஒருவேளை அப்படி முடியாவிட்டால் மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆதரவு பெற்றவர் தான் பிரதமராக வருவார் என தெரிவித்த அவர் அந்த பணியை நமது முதல்வர் சென்ற வாரத்தின் முதலே தொடங்கி விட்டார் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்