திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள், கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் காய்ச்சல் ஆகிய இரண்டு நோய்களையும் முற்றிலும் ஒழிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் மற்றும் கால்நடைகளுக்கு வரும் நோய்களை முன்பே கண்டறிந்து அதற்கு உண்டான முறையான தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி, ஆரோக்கியத்தை இத்திட்டம் உறுதிப்படுத்துகிறது.
*திட்டத்தின் சிறப்பம்சம்*
● கால்நடையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது
● கால்நடைகளுக்கு உண்டான நோய்கள் குறித்தும் மற்றும் தடுப்பூசிகள் குறித்தும் இத்திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்படுகிறது.
● தேவையற்ற நோய்வாய்ப்பட்டு இறக்கும் கால்நடைகள் எண்ணிக்கையை இத்திட்டம் மிக வெகுவாக குறைக்கிறது
*திட்டம் பெரும் முறை*
கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் அவரவர் பகுதியில் அமைந்துள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சென்று கால்நடைகளுக்கு உண்டான தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.
-ஆவடி.தா.இம்மானுவேல் தினகரன்
பாஜக ஆவடி மாநகராட்சி மேற்கு சிறுபான்மை அணி மண்டல் தலைவர்
திருவள்ளுர் மேற்கு மாவட்டம்