திருச்சி, சமயபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாபு. இவர் முன்விரோதம் காரணமாக கடந்த மே 6 ஆம் தேதி, சமயபுரம் நான்கு சாலை பகுதியில் வைத்து, சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சுள்ளான், கணேசன், விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஐந்து பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த லால்குடி வி.துறையூர் பகுதியைச் சேர்ந்த நீலமேகம் மகன் வள்ளி அருணன் ( 21 ), திருச்சி 3 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதை அடுத்து நீதிபதி பாலாஜி, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.