Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

முலாயம்சிங் யாதவ் மருமகள் பாஜகவில் இணைகிறார்

0

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அதிரடி திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிப்ரவரி 10, பிப்ரவரி 14 தேதிகளில் நடைபெறும் முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல்களுக்கான 107 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில் 20 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எஞ்சிய 296 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக விரைவில் அறிவிக்க உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என விவாதம் நடந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அயோத்தி சட்டசபை தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என . இந்த பட்டியலில் ஓபிசி சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி பாஜகவில் இணைந்தவர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள்தான். அதனை சரிகட்டும் வகையில் ஓபிசி சமூகத்தினருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங்கின் மருமகள் அபர்னா யாதவ், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முலாயம்சிங் யாதவின் இளைய மகனும் அகிலேஷ் யாதவின் சகோதரருமான பிரதிக் யாதவின் மனைவிதான் அபர்ணா யாதவ். 2017 சட்டசபை தேர்தலில் லக்னோ கண்டோமென்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் அபர்ணா. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு தாவும் நிலையில் முலாயம்சிங் யாதவின் மருமகளை பாஜக , கட்சியில் சேர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்