தாயுமானவர் கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கியது தொடர்பாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் எடுத்த நடவடிக்கை என்ன..?
உயர்நீதிமன்றம் கேள்வி…
நான்கு வார காலத்திற்குள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க ஆணை…!!
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தாமலவாரூபயம் கிராமம், வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண் 8-ல் உள்ள நன்செய் 0.9869.4 ச.மீ. பரப்பளவு உள்ள நிலத்தில் பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறைகேடான வழியில் தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்து மீண்டும் தாயுமானவர் திருக்கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய திருச்சி வருவாய் கோட்டாட்சியருக்கும் மற்றும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கும் அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் அவர்களின் கடித எண்: ந.க.எண். 631/2022/அ5/ நாள் 03.02.2023 படி கோரிக்கை விடுத்து இருந்தது.
மேற்படி கடிதத்திற்கு கடந்த 13 மாதங்களாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று (18-03-2024) மாண்புமிகு நீதியரசர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் நான்கு வார காலத்திற்குள் மாவட்ட வருவாய் அலுவலர் உரிய விசாரணை செய்தும் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.