அமைச்சருடன் சேர்ந்து கொண்டு அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திருச்சி மாவட்ட உயர் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள்
திருச்சி மாவட்ட அமைச்சர்களின் தயவில் உயர் பொறுப்புக்கு வந்த அரசு அதிகாரிகள் பலரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு இன்னும் பழைய நினைப்பிலேயே அரசு வேலையை செய்யாமல் அமைச்சருடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் அனைவரும் பொதுவானவராக செயல்பட வேண்டும் என்ற விதி இருந்தும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை ஆட்சியர் பாண்டியன் என்பவர் அமைச்சர் கே. என். நேருவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் ஆப் முகப்பு படமாக வைத்து தேர்தல் வேலையை செய்ததால் சர்ச்சையில் சிக்கிய நிலையில் மாவட்டத்தின் இன்னொரு அமைச்சரான மகேஷ் பொய்யாமொழிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அரசு மரியாதையுடன் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் இதர கோயில் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து சிறப்பான வரவேற்பு அளித்து கோயிலை சுற்றி காண்பித்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
நேர்மையாக நடக்குமா பாராளுமன்றத் தேர்தல் என்று கேள்வி எழுப்பும் மாற்றுக் கட்சியினர்.
கடும் நடவடிக்கை எடுப்பார்களா தேர்தல் ஆணையர்