கடந்த ஒன்றரை வருடங்களாக தாயுமானவர் கோவில் நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அளித்த புகார் மனு மீது மாவட்ட வருவாய் அலுவலர் முறையாக விசாரணை செய்யாத சூழ்நிலையில் இது தொடர்பாக நில அளவைத் துறை இயக்குனர் திரு.மதுசூதன் ஐஏஎஸ் அவர்களிடம் விரிவான புகார் மனு கொடுக்கப்பட்டது.
அதன்பின் மற்ற அதிகாரிகளை போல் புகார் மனுவினை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பாமல் ஒன்றரை வருடங்களாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் மற்றும் உயர்நீதிமன்றம் நான்கு வார காலத்திற்குள் அறிக்கை வழங்க சொல்லியும் எந்தவித நடவடிக்கை எடுக்காத மாவட்ட அலுவலரிடம் தொலைபேசி வாயிலாக விவரங்களை கேட்டு அறிந்து கொண்டும், சம்பந்தப்பட்ட திருச்சி மேற்கு வட்ட அலுவலர்களுக்கு தானே நேரடியாக சம்மன் அனுப்பி சென்னைக்கு வரவழைத்து அதிரடி விசாரணை தொடங்கியுள்ளார்.
மேற்படி விசாரணையில் கோவில் நிலத்தில் முறையாக எந்த ஆவணங்களும் இல்லாமல் முறைகேடாக பட்டா மாறுதலாகி உள்ளது என உறுதியாகி உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து அதிரடி உத்தரவு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
மாவட்ட நிர்வாகமே முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருந்தால், சென்னை வரை புகார் சென்று இருக்க வாய்ப்பு இருந்திருக்காது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்..