திருச்சி உறையூர் காவல் நிலையம் சார்பில் சோளம்பாறை ரோட்டில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், அவர்கள் சண்முகா நகர் 24வது கிராஸ் பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும் இந்திரா நகரை சேர்ந்த கணேஷ் என அடையாளம் காணப்பட்டனர்.
அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் “Dear” என்ற லாட்டரியை செல்போன் மூலமாக சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உறையூர் போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2,80,000, 5 செல்போன்கள், 5 லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் இவர்களுடன் தொடர்பில் உள்ள லாட்டரி வியாபாரிகளை கண்டறியும் வகையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.