Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

குத்தகைக்காரர்கள் இலாபத்திற்கு துணை போகிறதா கோவில் நிர்வாகம்

0

சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இட வசதி ஏற்படுத்தித் தராமல், குத்தகைக்காரர்கள் இலாபத்திற்கு துணை போகிறதா கோவில் நிர்வாகம் – பக்தர்கள் கேள்வி?

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத முதல் பக்தர்களின் வருகை அதிகரிக்கும், குறிப்பாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டுச் செல்வார்கள், இதனை முன்கூட்டியே அறிந்திருந்தும் கோவில் நிர்வாகம் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு சரியான முறையில் இடம் ஒதுக்கி தராமல் அலட்சியம் காட்டியதால், சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள மிகக்குறுகிய சர்வீஸ் சாலையில் ஓரமாக வரிசையாக வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அதன் விளைவாக இன்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளது. சமயபுரம் கோவிலுக்கு வந்து, சென்னை செல்லும் வாகனங்கள் அனைத்தையும் சமயபுரம் நால் ரோடு ஆர்ச்சி வலதுபுறம் பாலம் வேலை நடைபெறுவதால், இடது புறமாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் ஏறி செல்வதற்கு போதுமான வசதிகள் இருந்தும், பக்தர்களின் வாகனங்களை அந்த வழியாக அனுப்பாமல் குறுகிய சர்வீஸ் சாலையில், சென்னையிலிருந்து கோவிலுக்கு வரும் வாகனங்களையும், கோவிலில் இருந்து சென்னை வழியாக செல்லும் வாகனங்களையும் ஒரே வழியில் அனுப்புவதால், வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். அத்துடன் சர்வீஸ் சாலையில் முடிவில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழித்தடத்தையும், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தையும் கவனமாக பார்த்து கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது, இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகிறது, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு சரியான வழித்தடங்கள் இருந்தும், அதனை சரியான முறையில் பயன்படுத்தாமல், தவறான வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள், குத்தகைக் காரர்கள் சுயலாபத்திற்காக கோவில் நிர்வாகம் துணை போகிறதா! என கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.அத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் அருகே ஆட்டு சந்தை மைதானத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கோவிலுக்கு சென்றுவர முடியும் இதனை அறிந்தும் கோவில் நிர்வாகம் அந்த மைதானத்தை வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்தாமல் இருப்பது ஏன் எனவும் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் அறநிலையத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் அறநிலை துறையின் அமைச்சர் கோவிலுக்கு வந்து செல்லும் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட முன்னேற்பாடு செய்து தராத கோவில் நிர்வாக அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்