மார்ச் 15:
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும்.
கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும்.
தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது.
ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது.
மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது.
பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டுவந்தோம்; ஆனால் INDIA கூட்டணி 2ஜியில் ஊழல் செய்தது; 2ஜி ஊழல் முறைகேட்டில் பெரும் பங்கு வகித்தது திமுகதான்.
நாங்கள் உதான் திட்டத்தை கொண்டுவந்தோம்; அவர்கள் ஹெலிகாப்டரில் ஊழல் செய்தார்கள்.
கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம்; காமன்வெல்த் போட்டியில் காங். ஊழல் செய்தது – பிரதமர் மோடி
திமுக-காங்கிரஸ் ‘INDIA’ கூட்டணியால் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது.
ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதையே இலக்காக கொண்டுள்ளது திமுக-காங்கிரஸ் கூட்டணி.
திமுக, காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும்- பிரதமர் மோடி.