உறையூரில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து, ஒருவர் கைது, இரண்டு பேருக்கு வலை வீச்சு.
திருச்சி மார்ச் 22:திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 37) சம்பவத்தன்று இவர் உறையூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அவருடைய உறவினர் பாலசுப்பிரமணியன் என்பவர் இவரிடம் வந்து தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திரசேகரை அதே பகுதியை சேர்ந்த கணேசன்,ரபீக் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி பீர் பாட்டிலால் வயிற்றில் குத்தி விட்டு ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த சந்திரசேகர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இந்த சம்பவம் குறித்து சந்திரசேகர் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ரபீக்கை கைது செய்துள்ளனர். பாலசுப்பிரமணியன்,கணேசன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.