மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகர் அமமுக சார்பில் மனு*
குறைதீர்க்கும் நாளையொட்டி, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விற்கப்படும் போலி மதுபானங்கள் பற்றி, திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இம்மானுவில், *”திருச்சியில் கிட்டத்தட்ட பெரும்பாலான இடங்களில், அரசு அனுமதிக்கப்படும் நேரத்தை தாண்டியும், பல பார்களிலும் மதுபானங்கள் கிடைக்கின்றன.
*அதே போல், மதுபானங்கள் மட்டுமல்ல, இளைஞர்களை சீரழிக்கும் பல போதை வஸ்துக்களும் திருச்சியில் தடையின்றி கிடைப்பதாக பத்திரிக்கை செய்திகளிலும் வந்துள்ளன.*
*எனவே கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற துர்சம்பவம் போல், திருச்சியிலும் நடைபெறுவதற்கு முன், போதை மருந்து விற்பவர்களை மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபானங்கள் விற்கும் பார்கள் மீது இரும்பு கரம் கொண்டு அடக்கி, விரைந்து, கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”* என்று கூறப்பட்டுள்ளது.