மாண்புமிகு.தமிழக மக்களுக்கும் மற்றும் மாண்புமிகு.தமிழக அரசிற்கும் ஒரு அன்பான வேண்டுகோள் அனைவருக்கும் வணக்கம், உங்களுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பதும் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதும் உங்களின் முதல் கடமையாகும்… சமீபகாலமாக தற்போது தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளின் நிலைகளெல்லாம் மிகவும் தவறான செயல்களில் செயல்பட்டு வருகிறார்கள்… உதாரணமாக திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் அரசுப் மேல்நிலை பள்ளியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வட்டார கல்வி அலுவலர் மற்றும் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் ஆய்வு மேற்கொண்டதன் மூலம் ஒரு சில மாணவர்கள் மிகவும் இழிவான செயல்களில் நடந்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களும் மனம் நொந்ததால் தானாகவே முன்வந்து ஆசிரியர் ஒருவர் பணி வேண்டாமென்று VRS கொடுக்க வந்துள்ளார்.இந்தப் பள்ளியில் நடந்த செயல்களெல்லாம் வெளியில் வரக்கூடாது என்று தமிழக அரசு மூடி மறைத்துள்ளது.இது தமிழக அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் நஷ்டம் கிடையாது.மேலும் சமீபகாலமாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் இதுபோன்ற சம்பவங்களால் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.மேலும் காவல் நிலைய அதிகாரிகளையும் இது போன்ற புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளி வருகிறது.மேலும் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் மாணவ மாணவிகளை உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் தவறான செயல் முறைகளில் நடந்து வருகிறார்கள்… இதைப் பற்றி எல்லாம் தமிழக அரசிற்கும், தமிழகத்தில் பணிபுரியும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் அரசு ஊழியர்களுக்கும் நஷ்டம் கிடையாது…மாணவ மாணவிகளின் தவறான செயல்களால் உங்களுடைய வாழ்க்கையே நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்… இதைப் பற்றி தனிமையில் இருக்கும் போது சற்று சிந்தித்துப் பாருங்கள்…மேலும் பெற்றோர்களை நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளை நன்றாக இருக்கும் படி அறிவுரைகளைக் கூறி தினமும் நல்ல பழக்க வழக்கங்களைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.மேலும் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் 50% நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்தாலும் பெற்றோர்களாகிய நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளைப் பற்றி நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று தினமும் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இதை நீங்கள் செய்தால் தான் எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறைகள் நன்றாக இருக்கும் இதைப் பற்றி பெற்றோர்களை உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறாமல் தமிழக அரசையும், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களை குறை கூறுவதை சரியானதா? என்று சிந்தித்துப் பாருங்கள்…மேலும் தமிழக அரசு இந்த தவறான செயல்கள் செய்த மாணவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இந்த செயலால் தமிழக அரசு உள்நோக்கமாக மாணவ மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை படிப்பறிவு இல்லாமல் போகவும்,தவறான செயல்களில் ஈடுபடடும் என்றும் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.நான் இந்தப் பதிவில் தமிழக அரசை குறை கூறவில்லை,பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவ மாணவிகள் செய்யும் தவறுகளை கடுமையான முறையில் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் தெரிவித்து தவறு செய்யும் மாணவ- மாணவிகளை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க உரிய நபரை நியமிக்க தமிழக அரசைக் மேலும் இனியாவது தவறு செய்யும் மாணவ மாணவிகளை அவர்களின் பெற்றோர்களை அறிவுரைகள் கூறி திருந்தும் படியும், சம்பந்தப்பட்ட தமிழக அரசும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது போன்ற தவறான செயல்கள் நடைபெறாமல் தடுக்க 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் அடிப்படை சட்டம் மற்றும் சிறப்பு ஆலோசனை வழங்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு பொதுநலன் கருதி T.ரவிச்சந்திரன் Msc,BEd,BL, வழக்கறிஞர்,திருச்சி Cell;9655427655, 9385694055.