யாருக்காக எதற்காக கொண்டு செல்லப்பட்டது வெடிபொருள்கள் களம் இறங்கிய உளவு பிரிவு, உளவு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
– கிருஷ்ணகிரியில் இருந்து கோவை சென்ற லாரியை, சேலம் மாவட்டம், கருப்பூர் சுங் கசாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை யிட்டனர். லாரியில் வைக்கோல் கட்டுகளுக் குள் ஜெலட்டின் குச்சிகள், டெட்ட னேட்டர்கள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் இளையராஜாவிடம் விசாரித் தனர். அவர், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார்.
லாரியை அழகாபுரம், நகரமலை அடிவாரப் பகுதியில் உள்ள போலீஸ் துப்பாக்கி மைதானத்துக்கு கொண்டு சென்றனர். லாரி யில் தலா 25 கிலோ எடை கொண்ட 100 பெட்டிகளில் ஜெலட்டின் குச்சிகளும், 38 கட்டுகளில் 950 டெட்டனேட்டர் வயர்களும் இருந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாக ரத்தில் உள்ள தனியார் வெடிபொருள் மருந்து நிறுவனத்தின் பெயரிடப்பட்ட அட்டைகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அனுமதிபெற்று வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதா? அப்படி என்றால் ஏன் மறைத்து கொண்டு செல்ல வேண்டும், என்று கேள்வி எழும்புகிறது மேலும் இது குறித்து மத்திய உழவு பிரிவும் கண்காணித்து வருவதாகவும் தகவல் , கோவையில் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித் தும் போலீசார் விசாரிக்கின்றனர்.