சென்னை: தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.. அன்று ஜெயலலிதா தன் வீம்புக்காக மாற்றி தவறு செய்தார், இதே தவறை தற்போது உள்ள அதிமுகவினர் செய்தால் இப்போதுள்ள நிலையை கூட அவர்களால் காப்பாற்றி கொள்ள முடியாது என்று திக தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.தமிழ் நாட்டில் தமிழ் திராவிட ஆட்சியில் தை 1ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும்.. இதனை 1932ம் ஆண்டு தமிழர் அறிஞர்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர்.. இதனை தான் கலைஞர் கொண்டு வந்தார் அதனை ஜெயலலிதா தன் வீம்புகாக மாற்றி தவறு செய்தார்.. இதே தவறை தற்போது உள்ள அதிமுகவினர் செய்தால் தற்போது உள்ள நிலையை கூட அவர்களால் காப்பாற்றி கொள்ள முடியாது” என்றார்.