Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக அறநிலையத்துறையையும் செயல்படுத்தி…

0

 

தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களின் நிதிகளை அரசு பயன்படுத்தி வருகிறது. இந்துக் கோயில்களின் நிதிகளை இந்து கோயில்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வரவேண்டுமென்று இதை உயர்நீதிமன்றமும் வலியுறுத்திய பிறகும், கோவில் சொத்துக்களை அரசு நிதி போல பயன்படுத்துவதாக இந்து அமைப்புகள் பல போராட்டங்கள் நடத்தி வருகிறது.இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட விழாவில் அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக மாறி உள்ளது இந்து அறநிலையத்துறை.என்று ரோஜா கூறியதற்கு அமைச்சர் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, அதை மறுக்கவும் இல்லை இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இந்து கோயில்கள் சொத்துக்களில் வரும் வருமானங்கள் மற்றும் கோவில் காணிக்கைகளை அரசு தன்னுடைய வருமானமாக கருதுகிறது என்று தெரிய வருகிறது, இது கண்டிக்கத்தக்கது என்று இந்து அமைப்புகள் வன்மையாக கண்டிக்கிறது.என்று இந்து அமைப்புகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அரசு மறுப்பு தெரிவிக்கும் மா, அல்லது ரோஜா கூறிய கருத்து உண்மை என்று ஏற்றுக் கொள்ளுமா , என்று கேள்வி எழுப்பியுள்ளனர் இந்து அமைப்பினர்.

சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் எழும்பூர் தி.மு.க இளைஞர் அணி சார்பில் சென்னை புரசைவாக்கம் தானே தெருவில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி புகழ் அரங்கம் நிகழ்வு நடைபெற்றது.. இதில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, இயக்குனர் சுசி கணேசன், நகைச்சுவை நடிகர்கள் பாஸ்கர், மயில்சாமி, திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே செல்வமணி, நடிகை ரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

அப்போது பேசிய ரோஜா, ‘எனக்கு தாய்வீடு ஆந்திரா என்றால், தமிழ்நாடு மாமியார் வீடு… இங்குள்ள மக்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கு நான் வந்தது 2 நபர்களுக்காகத்தான்… ஒன்று முதல்வர் ஸ்டாலின், மற்றொன்று அமைச்சர் சேகர்பாபு… முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அண்ணன் தம்பி உறவாக மேடையை முதல்வர் ஸ்டாலின் அலங்கரித்தார். இப்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன தேவை என்பது அறிந்து மின்னல் போல் செயல்படுகிறார்.
பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்யும் நல்ல திட்டங்களால், நிச்சயம் இன்னும் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மட்டுமே திகழ்வார்… அறநிலையத்துறைக்கு அமைச்சராக சேகர்பாபு பதவியேற்ற பிறகுதான் அந்த துறையின் பவர் என்ன என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது… அந்த அளவிற்கு சிறப்பாக அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக அறநிலையத்துறையையும் செயல்படுத்தி வருகிறார்’ என்றார் ரோஜா.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்