மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கடைக்கண் பார்வையால் கனவிலும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் அவர்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு கவுன்சிலர் பதவி வேண்டும் என்ற நோக்குடன் இவர் மாவட்ட செயலாளராக தன்னுடைய பதவியை பயன்படுத்தி தன்னுடைய மகனுக்கு சீட்டு கொடுத்தார் ஆனால் நடந்ததோ வேறு ஒரு சுயேச்சை இடம் படுதோல்வி அடைந்த வெல்லமண்டி நடராஜன் மகன்.
பேரூராட்சியிலும் திமுகவே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றியை பெற்றிருக்கின்றனர். திருச்சியில் மொத்தமுள்ள 65 இடங்களில், திமுக கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக 3 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும், அமமுக 1 இடத்திலும் வெற்றியடைந்துள்ளது. பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் ஒரு வார்டில்கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் துணை மேயர் சீனிவாசன் அதிமுக சார்பாக நின்று தோல்வியைச் சந்தித்தார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இவரது மகன் ஜவஹர்லால் நேரு திருச்சியின் 20ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் எல்.ஐ.சி சங்கர் என்பவர் போட்டியிட்டார்.
இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எல்.ஐ.சி சங்கர் வெற்றி பெற்றதாகத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன், உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரிடத்தில் தோல்வியடைந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில், குறிப்பாக திருச்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.