பட்ஜெட்டை எதிர்நோக்கும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்:
2012 ஆம் ஆண்டு உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல் இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்வி இணைச்செயல்பாடு பாடங்களில் 16ஆயிரத்து 549பகுதிநேர ஆசிரியர்கள் 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டார்கள்.
கடைசியாக இவர்களின் தொகுப்பூதியம் 2021ஆம் ஆண்டு 10ஆயிரமாக்கப்பட்டது.
58 வயது பணிஓய்வு, ராஜினாமா என 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு 12ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள்.
10 ஆண்டுக்கும் மேல் பணிபுரியும் இவர்கள் திமுக தேர்தல் அறிக்கையை மலை போல் நம்பி உள்ளார்கள்.
இது பட்ஜெட் நேரம் என்பதால் பணிநிரந்தரம் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :
முதல் பட்ஜெட்டில் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என எதிர்பார்த்தோம்.
திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் நிரந்தரம் என சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றபடாமல் உள்ளதை நினைவூட்டி வருகிறோம்.
வருகின்ற பட்ஜெட்டில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிரந்தரம் செய்வார் என்று மலைப்போல் நம்புகிறோம்.
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.