Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தனது தொகுதியில் இரண்டு கோட்டத் தலைவரும்……

0

1989 ஆண்டு முதல் ஒரே கட்சியில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வரும் , பலரும் உயர் பதவியில் உள்ள நிலையில் பொன்மலை பகுதி திமுக செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் அவர்கள் தற்போது தான் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.இவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கைகளால் 15.9.2021 அன்று தமிழகத்திலேயே சிறந்த பகுதி செயலாளர் என்ற விருதை பெற்றவர்.
இந்நிலையில் தற்போது திருச்சி மாநகராட்சி கோட்ட தலைவர்களுக்கான அறிவிப்பு தமிழக முதல்வர் வெளியிட்டு உள்ளார்.

மாண்புமிகு அமைச்சர் திரு.மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திரு.மதிவாணன் மற்றும் திரு. கொட்டப்பட்டு தர்மராஜ் ஆகிய இருவரையும் கோட்ட தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால்
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தனது தொகுதியில் இரண்டு கோட்டத் தலைவரும் கள்ளர் சமூகத்தினரா?
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்திற்கும், சிறுபான்மையினருக்கும்,வெள்ளார் சமுதாயத்திற்கும் என ஒரு கோட்ட தலைவர் வேண்டும் அது திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் வெற்றி பெற்ற ஒருவரை தான் கண்டிப்பாக கோட்ட தலைவராக நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் நேரடியாக முறையிட்டுள்ளார்.
திருச்சி அமைச்சர்கள் இருவரும் கை கழுவி விட்டதால் இனிகோ இருதயராஜ் நேரடியாக மேலிடத்தில் மோதி இந்தப் பதவியை பெற்று உள்ளார்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் திருச்சி கவுன்சிலர் இதுவரை திமுக உறுப்பினர் அட்டை கூட பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ்.
1989 ஆண்டு முதல் இன்று வரை எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சிப்பணி, மக்கள் பணியாற்றி வருபவர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுகவின் ஜ.டி.விங் இவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறக்கூடிய நபர் என தலைமைக்கு தகவல் அனுப்பியது குறிப்பிடத்தக்கது
அன்று முதல் இன்று வரை கட்சிப் பணியாற்றி வரும் கொட்டப்பட்டு தர்மராஜ் அவர்கள்தான் இந்தப் பகுதி கோட்ட தலைவர் ஆகி மக்கள் பணியில் மேலும் தன்னை ஈடுபடுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்த நிலையில்
தற்போது வெளிநாட்டிலிருந்து வரும் கிறிஸ்தவ டிரஸ்ட் பணத்தை பாதுகாக்க ஒர் இயக்கத்தை தொடங்கி அதனை பாதுகாக்க திமுக உடன் இணைந்து வெற்றிவர்,நாளை இந்த பணத்தை பாதுகாக்க எந்த கட்சியுடன் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயங்காதவர். இவர் எல்லாம் திமுக தலைவரிடம் பரிந்துரை செய்ததன் பேரில் திருச்சியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் கோட்டத் தலைவர் பதவி என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கவுன்சிலருக்கு தனது வீட்டு வாசலில் நடப்பது கூட தெரியாத நபர். இவர் எப்படி தனது வார்டில் பணியாற்றுவார் என அப்பகுதி பொது மக்களே எதிர்பார்க்கும் நிலையில், கோட்டத் தலைவர் கூட்டத்தை இவர் எப்படி நடத்துவார் என அப்பகுதி கவுன்சிலர்களே அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கூறும்போது மற்ற கட்சியினர் போல் இல்லாமல் திமுகவைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டும் தான் பதவி என கூறியது பொய்த்து விட்டது

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்