திருச்சி கோட்டை காவல் நிலைய சரகம்
மதுரை ரோடு நத்தர்ஷா தர்கா பழைய குட்செட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கபூர்காண். இவரது மகன் முகமதுசபிக் (வயது 47). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவில் மார்கெட்டில் வெற்றிலை கடையில் வேலை பார்க்கும் அரியமங்கலம் சலிம் என்பவரும் குடிபோதையில் இருந்துள்ளனர் .சலிம் தர்காவிற்கு யாத்திரை வந்தவர்களிடம் பிரச்சினை செய்ததாகவும், அதனை சபி கேட்டபோது சண்டை ஏற்பட்டு சலிம் அடித்து விட்டார் . இந்திலையில் முகமதுசபிக் சலிமை தள்ளி விட்டதால் சலிம் கிழே விழுந்து பின் தலையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டு மயக்கத்தில் இருந்துள்ளார். முகமது சபிக் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததார். உடனடியாக 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் சலிம் இறந்து விட்டதாக கூறினர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் கோபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
2 Comments
Leave A Reply
Cancel Reply
JeoKkXCTDxnwz
MSmxtonbdKCJGF