பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள், லாட்டரி சீட்டுகள் விற்பனையை ஒழிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவும் தமிழ்நாட்டின் அனைத்து காவல் மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனையை ஒரு மாதத்திற்குள் ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று (டிசம்பர் 7), அனைத்து காவல் மண்டலங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தால், தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவரை ‘குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’ செய்து சிறையில் அடைக்க வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களைக் கடத்தல், பதுக்கல், கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..