திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நகர்புறங்களில் செல்லும் உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை சார்ந்த பணியாகும்.
மேலும், உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட நீர்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளர், ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு, அவர்களின் கடித எண் :கோ.14/உ.பொ.(தி)/ஆ.பா.பிரிவு/2023/ *நாள்: 20.11..2021 நினைவூட்டுகள் 10.12.2021, 07.11.2022, 09.12.2022, 12.01.2023, 17.03.2023, 19.07.2023, 04.08.2023, 04.09.2023, 04.10.2023, 20.11.2023 20.12.2023, 19.01.2024, 26.02.2024, 30.04.2024, 21.06.2024, 18.07.2024 மற்றும் 31.07.2024* ஆகிய தேதிகளில் *18* கடிதத்தின் வாயிலாக கோ. அபிஷேகபுரம் கோட்டம், பொன்மலை கோட்டம், மற்றும் அரியமங்கலம் கோட்டம் உதவி ஆணையர்களுக்கும் மற்றும் அதே போன்று உதவிச் செயற்பொறியாளர். நீ.வ.து., ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்டம் அவர்களின் கடித எண்:கோ.53/உ.செ.பொ(தி)/2021/நாள்: *30.10.2021, 15.11.2021, 02.12.2021, 27.12.2021, 10.01.2022, 24.01.2022, 15.02.2022, 23.02.2022, 10.03.2022, 02.08.2023, 04.09.2023, 04.10.2023, 20.11.2023, 20.12.2022, 19.01.2024, 26.04.2024, 30.04.2024, 21.06.2024 மற்றும் 18.07.2024* ஆகிய தேதிகளில் *19* கடிதத்தின் வாயிலாக திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளப்பட்டும்
*இந்நாள் வரை உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை கலக்காமல் இருக்க திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.*
மேலும், திருச்சி மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் அவர்களின் க.எண்.139 பல/வ.அ.4/கோ.36/2024/நாள்: 15.05.2024 –ன் கடிதத்தின் மூலமாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையருக்கு *வருடத்திற்கு, இரண்டு முறை ஆகயாத் தாமரை அகற்றிடவும் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க கோரியும்* கேட்டுக்
கொள்ளப்பட்டும் மாநகராட்சி நிதியிலிருந்து செலவு செய்ததாக கணக்கு காட்டி எந்தவித பணிகளும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இருப்பினும் உய்யகொண்டான் வாய்க்காலில் தேங்கியுள்ள ஆகாயதாமரைத் செடிகள் வருடந்தோறும் நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் மூலம் மட்டுமே தொடர்ந்து அகற்றப்படுவதாகவும் மாநகராட்சி எந்தவிதப் பணிகளும் செய்யாமல தூர்வாரும் பணிக்காக சில லட்சங்களை கணக்கு காட்டி கல்லா கட்டுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
மாண்பமை பசுமை தீர்ப்பாயம் வழக்கு எண் O.S.No.112/2020/நாள்: 13.09.2021 தீர்ப்பினை முறையாக செயல்படுத்தி இருந்தால் உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுத்து இருக்கலாம் ஆனால் அதற்கு மாறாக கமிஷனுக்கு ஆசைப்பட்டு இரண்டு துறை அதிகாரிகளும் எந்தப் பணிகளையும் செய்யாமல் அரசு நிதியை மட்டும் கல்லாகட்டி எடுத்துச் செல்வதாக புகார்கள் தெரிவிக்கின்றனர். சமூக ஆர்வலர்கள்
இவ்வளவு ஏன் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் ஆய்வுக்கு வரவுள்ளதாக தகவல் வந்தும் கோரையாற்றில் படர்ந்து உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற எந்தவித நடவடிக்கை எடுக்காமல் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இனியாவது திருச்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா….? என எதிர்பார்க்கும் சமூக ஆர்வலர்கள்….