*வேடிக்கை பார்க்கும் இந்து சமய அறநிலையத்துறை* ….
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள *அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில்* , பூமி சம்பந்தமான அனைத்து விதமான குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
இங்கு கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், வீடு வாங்க, விற்க, வாஸ்து தோஷம் நீங்க, சொத்து பாகப் பிரச்னைகள் தீர என பூமி சம்பந்தமான குறைகள் நீங்க அநேக பக்தர்களும் இங்கு வந்து குவிகிறார்கள்.
இங்கு பரிகார பூஜை என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுமார் பத்து லட்சம் வரை வசூல் வேட்டை செய்து வருகிறார் கோயில் அர்ச்சகர் கிரி.
இக் கோவில் அர்ச்சகர் கிரி அவர்கள் ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவது மட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் இக்கோவில் அர்ச்சகராக வேலை செய்து வருகிறார்.
மேலும் நான் கறி சாப்பிடாவிட்டாலும், நான் உரித்த கோழி போல் சிவப்பாகவும் மற்றும் கட்டுமஸ்தாகவும் இருப்பதாக கூறி கோவிலுக்கு வரும் பெண்களிடம் முகம் சுழிக்கும் வகையில் பேசி வருகிறார். என்ற பகுதி மக்கள் முகம் சுளிக்கும் வகையில் கூறுகிறார்கள். ….
இக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பிடி மண்ணை சாமி பாதத்தில் வைத்து கொடுப்பதற்கு ரூபாய் 500 விதம் பணம் வசூல் செய்தும் மற்றும் பரிகார பூஜை என்ற பேரில் பக்தர்களிடம் தலா 3500 விதம் சுமார் 200 பக்தர்களிடம் ஒவ்வொரு வாரமும் வசூல் செய்து வருகிறார்.
மேலும் கோவில் அர்ச்சகர் செய்யும் வசூல் தொகை லட்சத்தில் ஒரு பங்கு திருச்சி மண்டல இணை இயக்குனர் முதல் கோவில் செயல் அலுவலர் வரை பங்கு தொகை செல்வதால் இந்து சமய அறநிலைத்துறைக்கு புகார் சென்றாலும் நடவடிக்கை ஏதுமில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.