சென்னை: பொது அமைதிக்கான அச்சுறுத்தலும், காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாத நிலை திமுக ஆட்சிக் காலத்தில் நிலவுவதாகவும், திமுகவின் அராஜக செயலுக்கு, சட்ட விரோத செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவினர் தன்னை பணிசெய்ய விடாமல் தடுப்பதாகவும், இதன் காரணமாகத் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்ட ஆடியோ தமிழகத்தில் வைரலானது.சூப்பர் ஹீரோ.. சென்னை டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. 5 கிமீ நடந்தே போய் வழி உண்டாக்கிய நபர்.. செம மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாகவும், தமிழக காவல்துறையினர் திமுகவின் தொண்டர்படை போல் செயல்பட்டு வருவதாக அதிமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாத நிலை திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்குஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வருவதையும், பட்டப்பகலில் கொலைகள், கொள்ளைகள் அன்றாடம் நடைபெற்று வருவதையும் அரசு அதிகாரிகள் தொழிலதிபர்கள் இன்னும் சொல்லப்போனால் காவல்துறையினரும் திமுகவினரால் நாள்தோறும் நடத்தப்படுவதையும் அரசு ஒவ்வொரு அங்கத்திலும் திமுகவுடன் தலையீடு தலைவிரித்து ஆடுவது பற்றியும் தனது அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டி இவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் அவர்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்து இருந்ததாக கூறியுள்ளார்.காவல்துறையில் திமுக தலையீடுதனது புகார் ஒரு விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என கூறியுள்ள ஓபிஎஸ், இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன எனவும், சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே வருகிறது, கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படக் கூடிய அவல நிலை உருவாகியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.காவல் சார் ஆய்வாளர்திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஓ பன்னீர் செல்வம் , வேப்பங்குளம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளார் , அதில் தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் ஏலச்சீட்டு மோசடி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கூடாது, மணல் கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்யக் கூடாது என திமுக பிரமுகர் தொல்லை கொடுப்பதாகவும் , இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ வெளியீட்டை குறிப்பிட்டுள்ளார். ஒரு காவல் சார் ஆய்வாளரே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்றால் மற்றவர்களின் நிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது எனவும், காவல்துறையினரையே குற்றம் செய்யத் தூண்டுகிறது திமுக என கூறியுள்ளார்தீய சக்திகளின் ஆதிக்கம்2021 – 2022 ஆம் ஆண்டிற்கான காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பிற்கு முற்றிலும் முரணாக தமிழ்நாட்டில் காவல்துறையினரை நிலை உள்ளதாகவும், கடந்த 8 மாத காலமாக நடைபெற்று நிகழ்வை பார்க்கும் போது தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே செல்வது தெள்ளத் தெளிவாகிறது எனவும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை திமுக ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.முதல்வருக்கு கோரிக்கைசட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சரின் துறையிலேயே இதுபோன்ற அராஜகம் என்றால் மற்ற துறைகளை கேட்கவே வேண்டாம் எனவும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல இது போல எத்தனை அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என அறிக்கையில் தெரிவித்துள்ள ஓபிஎஸ், திமுகவின் இது போன்ற அராஜக செயலுக்குக் சட்டவிரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படத் கொஞ்சம் கொஞ்சமாக தன் நாட்டை இறப்பார் என்ற திருக்குறளை மனதில் நிலை நிறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்-