இந்துக்கள் பூஜை என்றால் கசக்கும் இந்து கோவில்களின் பணம் சொத்து என்றால் இனிக்கும் திராவிட மாடலுக்கு என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்.
தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் சமீபத்தில் நடந்த பூமி பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது அங்கு காவி வேட்டியும் துண்டும் அணிந்திருந்த நபரை பார்த்தவுடன் பொங்கி எழுந்து விட்டார். அவர் பொங்கி எழும்பொழுது இது திராவிட மாடல் ஆகவே பூஜை புனஸ்காரம் போன்றவை அரசு விழாக்களில் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தும் மீறி நடத்தியதாக கூறி அந்த பூஜையை ஏற்பாடு செய்த அதிகாரியையும் கண்டித்து மேலும் அந்த பூஜாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த சொல்லி கட்டளையிட்டுள்ளார். அரசு விழாக்களில் இந்து மத கலாச்சாரம் தேவையில்லை என்று கூறும் திமுக எம்பி செந்தில்குமாருக்கு ஒரு கூடுதல் தகவலாக பிஜேபி மற்றும் இந்து அமைப்பினர் விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது திமுக எம்பி செந்தில்குமார் கூறியது போல அரசு விழாக்களை கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை ஏன் அழைக்கவில்லை என்றும் அப்படி அழைக்காத பட்சத்தில் இந்து பூஜாரியை மட்டும் அழைத்து செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய செந்தில்குமார் அவர்களே இந்து கோவில் சொத்துக்கள் மட்டும் வருமானங்களை மட்டும் இந்து அறநிலைத்துறை மூலமாக தமிழக அரசு எடுத்துக் கொள்ளும் பொழுது ஏன் மௌனமாக இருந்தீர்கள். திராவிட மாடலுக்கு இது பெரும் இழுக்கு ஆகவே உடனடியாக திராவிட மாடல் இந்து கோயில்களை விட்டு வெளியேறி விடும் என்ற உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்தும் என்று உறுதி அளிக்க முடியுமா இஸ்லாமியர்களின் கிறிஸ்தவர்களின் திருத்தலங்களில் சொத்துக்களும் அவரவர் கையில் இருக்கும் பொழுது இந்துக்களின் கோவில் சொத்துக்கள் உண்டியல் பணத்தினை மட்டும் திராவிட மாடல் எடுத்துக் கொள்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் இது திராவிட மாடலுக்கு இழுக்கு அல்லவா ஆகவே உடனடியாக இந்து அறநிலையத்துறையை கலைத்து விட்டு இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று பிஜேபியினர் கருத்து கூற தொடங்கிவிட்டனர். இந்துக்களின் கலாச்சாரம் கசக்கும் ஆனால் இந்துக்களின் கோவில் சொத்துக்கள் மட்டும் இனிக்குமா என்று எம்பி செந்தில்குமாரை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள். இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் ஆன்லைன் மீடியாக்கள் மூலமாக எம்பி செந்தில் குமார் செய்த வேலையினை நியாயப்படுத்தி வருகிறார்கள் .