திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு வட்டம், உறையூர், பாளையம் பஜார் ரோட்டில் அமைந்துள்ள விக்னேஷ் அவன்யூ அப்பார்ட்மெண்ட்.
இந்த அப்பார்ட்மெண்ட் தைலம்மை கோயிலுக்கு சொந்தமான குளத்தை முழுவதும் ஆக்கிரமித்து செய்து அப்பார்ட்மெண்ட் கட்டி அதனை கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளாக விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கண்ட விக்னேஷ் அவன்யூ அப்பார்ட்மெண்ட் அமைந்துள்ள இடம் குளம் என்று வருவாய் துறை ஆவணங்களில் பதிவாகி உள்ளதால் மேற்கண்ட தைலம்மை கோயிலுக்கு சொந்தமான குளத்தை மீட்க சமூக ஆர்வலர்கள் சிலர் அரசுக்கு புகார் மனு கொடுத்ததன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை மேற்கண்ட அபார்ட்மென்ட் இடிக்க ஏழு நாள் அறிவிப்பு கடிதம் திருச்சி மேற்கு வருவாய் வட்டாட்சியர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மேற்கண்ட அப்பார்ட்மெண்டில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் சகோதரர் திரு கே என் மணிவண்ணன் அவர்களின் வீடும் அமைந்துள்ளதால் வருவாய்த்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்