சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் புகார் பெட்டி ஒன்று வைத்து, அதில் பொதுமக்களிடம் மனுவை வாங்கி பூட்டி சாவியை எடுத்துச் சென்றார் தற்போதைய முதல்வர் ஸ்டாலின். அந்த மனுக்கள் என்ன ஆனது சாவி ஏதும் தொலைந்து விட்டதா. என்று பொது மக்களிடம் பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் 100 நாட்களில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட விட்டாள். முதல்வர் அறைக்கு நேராக வரலாம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களை நேராக சந்திக்க வேண்டாம் என்றும் அப்படி சந்தித்தால் பல சிக்கலான கேள்விகள் வந்துசேரும் எனவும் தெரியவந்தது உளவுத்துறைக்கு. 100 நாட்களில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று கூறி மக்களிடம் ஓட்டு வாங்கிய முதல்வர், 8 மாத காலம் ஆகியும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்களிடம் நேராகச் சென்று வாக்கு கேட்க வேண்டாம். என
உளவுத்துறை அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், மக்களுக்கு நேரடியாகவும், உடனடியாகவும் பலனைக் கொடுக்கக்கூடிய முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அவர்களின் கோபம் ஸ்டாலினின் நேரடி பிரச்சாரத்தில் எதிரொலித்தால் அது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதாலும் நேரடி பிரச்சாரத்தை தவிர்த்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அதாவது, மக்களிடமிருந்து அத்தகைய குரல்கள் வருகிறதோ இல்லையோ ஸ்டாலினின் நேரடி பிரச்சார கூட்டத்தில் அதிமுக மகளிர் அணியை சேர்ந்தவர்களை களமிறக்கி, ‘வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?’ என குரல் கொடுக்க வைக்க அதிமுக மா.செ.க்கள் திட்டமிடக்கூடும் என்பதையும் உளவுத்துறையினர் மோப்பம் பிடித்தனர். இதனையும் முதல்வருக்கு சொல்லப்பட்ட நிலையில், நேரடி பிரச்சாரத்தை தவிர்த்தார் ஸ்டாலின் என்று சுட்டிக்காட்டுகின்றன உளவு வட்டாரங்கள்.
90 சதவீத வெற்றி திமுகவுக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என உளவுத்துறை ரிப்போர்ட் தந்துள்ளது. இந்த நிலையில், தற்போது கள நிலவரம் திமுகவுக்கு சற்று எதிர்மறையாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்து வருகிறதாம். இதனை எப்படி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்கிற தயக்கம் அவர்களிடம் இருக்கிறதாம்.
எந்தெந்த மாவட்டத்தில், எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவுக்கு வீக் என தகவல் கிடைத்துள்ளதோ அதனை சரி செய்யுமாறு திமுக அமைச்சர்களிடம் தகவலை பாஸ் செய்து உள்ளனராம் உளவுப்பிரிவினர். இதனால் இங்கே மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் இப்போதே வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, 90 சதவீத வெற்றி என ரிப்போர்ட் தந்திருப்பதால் அதனை மெய்ப்பிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறார்கள் மாநில உளவுத்துறையினர் என்று அரசு தரப்பு தவளைகள் வருகின்றன.