திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை பொருட்படுத்துவதில்லை, தமிழக மக்கள் லஞ்சம் ஊழலற்ற புதிய ஆட்சி நல்லாட்சி வேண்டும் என விரும்புகிறார்கள். 50 ஆண்டு காலமாக மாற்றி மாற்றி ஆட்சி செய்தாலும் வெள்ளம் தொடர்பான பிரச்சினைக்கான தீர்வு இதுவரை காண முடியவில்லை. பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தூய்மை இந்தியா என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நல்லாட்சி என தெரிவிக்கிறார்கள் நல்லாட்சி என்பது சட்ட விதிகளை மதிப்பது என்பதுதான். அதை நீங்கள் மதிக்கிறீர்கால என் தம்பிகளை மூன்று நாட்களுக்கு மேல் கடத்தி வைத்து மிரட்டி உள்ளீர்கள். ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளனர். இதனை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன். சீமானுக்கு 1,800 கோடி சொத்து உள்ளது என்று கூறுபவர்கள் அது எங்கிருந்து வந்தது என்றும் கூற வேண்டும்.
அப்படி இருந்தால் என்னுடைய வீட்டிலும் சோதனை செய்து பிஜேபி பணத்தை எடுத்துச் செல்லட்டும். கொரோனா சூழல் காரணமாக வாக்கு சேகரிக்க இயலவில்லை, ஊடகத்தின் வாயிலாக நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம், எங்களின் எளிய பிள்ளைகளை தான் தேர்தலில் நிறுத்தி உள்ளோம் ,சிறந்த நிர்வாகத்தை எங்களின் பிள்ளைகள் வழங்குவார்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்’ என்று கூறினார்.